தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாது: அமைச்சர் உறுதி

நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தாலும் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.
செந்தில் பாலாஜி (கோப்புப் படம்)
செந்தில் பாலாஜி (கோப்புப் படம்)

நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தாலும் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் சிமெண்ட் விலை உயர்வதாக நேற்று சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

நிலக்கரி மூலம் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுவதால், தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நிலக்கரிக்கு தட்டுப்பாடு இருந்தாலும் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாது என்று உறுதியளித்துள்ளார். 

இது தொடபாக பேசிய அவர், தமிழக அரசின் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. தமிழக அரசுக்கு மின்சாரம் விநியோகிக்கும் தனியார் நிறுவனங்களுக்குத்தான் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் விநியோகத்தை தனியார் நிறுவனங்கள் 50 சதவிகிதம் வரை குறைத்துவிட்டதாகவும், இதனால் அரசு மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com