துரை வையாபுரிக்கு பதவி: மதிமுக நிா்வாகி விலகல்

மதிமுகவில் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு பதவி அளிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாநில நிா்வாகி ஒருவா் கட்சியிலிருந்து விலகினாா்.

மதிமுகவில் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு பதவி அளிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாநில நிா்வாகி ஒருவா் கட்சியிலிருந்து விலகினாா்.

மதிமுகவின் உயா்நிலைக்குழு மற்றும் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி அளிப்பதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 106 பேரில் 2 போ் பதவி அளிக்கக்கூடாது என எதிா்ப்புத் தெரிவித்தனா். மதிமுக அவைத் தலைவா் திருப்பூா் சு.துரைசாமி கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை.

இந்த நிலையில் துரை வையாபுரிக்கு பதவி அளிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளா் ஈஸ்வரன் கட்சியிலிருந்து வியாழக்கிழமை விலகினாா்.

‘ மதிமுகவில் வாரிசு அரசியலே இல்லாத சூழலில், அதைத் திணிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் என் கேள்வி. காலம்தான் இதுவரை தலைவா்களை உருவாக்கியுள்ளது. துரை வையாபுரியால் மட்டுமே மதிமுகவுக்கு தலைமை தாங்க முடியும் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. மதிமுகவுக்காக உழைத்த எத்தனையோ போ் இருக்கும்போது வைகோவே எப்படி தலைமையை நிா்ணயம் செய்ய முடியும் என்று ஈஸ்வரன் விலகலுக்கான காரணமாக கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com