கம்பம் ஜமாத் கமிட்டி தேர்தல்: போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது

தேனி மாவட்டம் கம்பம் வா வேர் பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி தேர்தல் போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.  
போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கிய கம்பம் ஜமாத் கமிட்டி தேர்தல்
போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கிய கம்பம் ஜமாத் கமிட்டி தேர்தல்


கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் வா வேர் பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி தேர்தல் போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.  

தேனி மாவட்டம், கம்பம் நகரில் வா வேர் பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி உள்ளது. இதன் நிர்வாகிகள் பதவி காலம் முடிவடைந்தது.

இதையடுத்து ஜமாத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று, வக்பு வாரியம் மூலம் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை போலீஸ் பாதுகாப்புடன் ஜமாத் தேர்தல் நடைபெற்று வருகிறது.  இதில் 29 பேர் போட்டியிடுகின்றனர். 21 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் மொத்தம் 4,732 வாக்குகள் உள்ளன.

ஒரு நபருக்கு 21 வாக்குகள் என்பதால்,  4 மணிவரை தேர்தல் நடக்கிறது. 5 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு உடனே  முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் அமைதியாக, நடைபெறும் வகையில், உத்தமபாளையம், ஏ.எஸ்.பி.ஸ்ரேயா குப்தா தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com