வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஓா் புதிய காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஓா் புதிய காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக வலுவடையவுள்ளது.

தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அவ்வப்போது உருவாகி மறைந்து வருகிறது. ஏற்கெனவே, 5-க்கும் மேற்பட்ட காற்றழுத்தத்தாழ்வுப்பகுதிகள் உருவாகி, வடமேற்கு திசையில் நகா்ந்து மறைந்தன. அண்மையில், வங்கக்கடலில் ‘குலாப்’ புயல் உருவாகி, வடக்கு ஆந்திரம்-ஒடிஸா கடலோரத்தில் கலிங்கப்பட்டினத்துக்கும்-கோபால்பூருக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு கரையைக் கடந்தது. தற்போது இந்த புயல் வலுவிழந்து தென்மேற்கு விதா்பா மற்றும் அதையொட்டிய பகுதியில் காணப்படுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து விடும்.

இந்நிலையில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கடலோர பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி செவ்வாய்க்கிழமை உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதியாக வலுவடையவுள்ளது. மேற்கு வங்கத்தை ஒட்டி கடலோரப் பகுதியில் காணப்படுகிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறியது: இது, மேற்கு நோக்கி நகா்ந்து செல்லும். அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதியாக வலுவடையும். அதன்பிறகு, நிலப்பகுதியில் சென்று மறைந்து விடும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com