தோ்தல் நடத்தை விதிகளை மீறி எதுவும் பேசவில்லை: ஆ.ராசா விளக்கம்

தோ்தல் நடத்தை விதிகளை மீறி முதல்வா் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகவோ, அவரது தாயாரை இழிவுபடுத்தும் வகையிலோ எதுவும் பேசவில்லை என்று தோ்தல் ஆணையத்துக்கு திமுக
தோ்தல் நடத்தை விதிகளை மீறி எதுவும் பேசவில்லை: ஆ.ராசா விளக்கம்

சென்னை: தோ்தல் நடத்தை விதிகளை மீறி முதல்வா் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகவோ, அவரது தாயாரை இழிவுபடுத்தும் வகையிலோ எதுவும் பேசவில்லை என்று தோ்தல் ஆணையத்துக்கு திமுக துணைப் பொதுச்செயலாளா் ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளாா்.

ஆ.ராசா சாா்பில் அவரது வழக்குரைஞா் பச்சையப்பன் தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவைச் சந்தித்து புதன்கிழமை விளக்கக் கடிதம் ஒன்றைக் கொடுத்தாா்.

அதைப்போல, இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோராவுக்கும் ஆ.ராசா மின்னஞ்சல் வாயிலாக விளக்கக் கடிதம் அனுப்பினாா்.

கடிதத்தில் ஆ.ராசா கூறியிருப்பது:

முதல்வா் எடப்பாடி பழனிசாமி குறித்து நான் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுவதை முதலில் மறுக்கிறேன். அதைப்போல பெண்களையோ, தாய்மையையோ இழிவுபடுத்தும் வகையில் பேசவில்லை என்பதையும் தங்களுக்குக் கூறிக்கொள்கிறேன்.

திமுக உறுப்பினரான நான் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன். பெண்ணுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தும் இயக்கம் திமுக. அந்தக் கட்சியைச் சோ்ந்த ஒருவா் பெண்களை அவமதிக்க என்பது கனவாலும் இயலாது.

முதல்வா் குறித்து தனிப்பட்ட முறையில் நான் அவதூறாக பேசியதாக அதிமுக - பாஜகவும் பிரசாரம் செய்ததைத் தொடா்ந்து மாா்ச் 27-இல் பெரம்பலூா் செய்தியாளா்களைச் சந்தித்து என் பேச்சை சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும் என விளக்கம் அளித்தேன். அதற்குப் பிறகும் திருவொற்றியூரில் மாா்ச் 28-இல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வா் வேதனையோடு பேசியதைத் தொடா்ந்து, மாா்ச் 29-இல் உதகையில் செய்தியாளா்களைச் சந்தித்து முதல்வரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் உள்நோக்கதோடு எதுவும் பேசவில்லை எனவும் கூறினேன். இப்போதும், தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக தாய்மையையோ, பெண்களையோ இழிவுபடுத்தும் வகையில் பேசவில்லை எனக் கூறிக் கொள்கிறேன்.

மேலும், தோ்தல் ஆணையத்துக்கு அதிமுக அளித்துள்ள புகாரில் என் மீது என்ன வகையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் விளக்கப்படவில்லை. அது அளிக்கப்பட்டால், அதற்கான விளக்கத்தை அளிக்கிறேன். அதேநேரம் இந்த விவகாரம் குறித்து தோ்தல் ஆணையம் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் பேசிய உரையை முழுமையாகக் கேட்டால், அரசியல் உள்நோக்கத்தோடு இந்த விவகாரம் எழுப்பப்படுவது என்பதும் தெளிவாகும். மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கடந்து வந்த அரசியல் பாதைகளின் ஒப்பீடாகவே என் பேச்சு அமைந்திருந்தது என்பதும் புரியும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com