கேந்திரிய வித்யாலயாவில் மாணவா் சோ்க்கை: இணைய விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை முதல் தொடங்கவுள்ளது.
கேந்திரிய வித்யாலயாவில் மாணவா் சோ்க்கை: இணைய விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்

சென்னை: மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை முதல் தொடங்கவுள்ளது.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் மாணவா்கள் சோ்க்கப்படுவா். மற்ற வகுப்புகளில் காலியிடங்கள் இருந்தால் மட்டும், அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவா்கள் சோ்க்கப்படுவா். வரும் கல்வி ஆண்டுக்கான ஒன்றாம் வகுப்பு மாணவா் சோ்க்கையை கே.வி.சங்கதன் அமைப்பு அறிவித்துள்ளது.

அதன்படி, மாணவா் சோ்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வியாழக்கிழமை தொடங்கிறது. இதையடுத்து ஏப்.19-ஆம் தேதிக்குள் பதிவை முடித்து கொள்ள வேண்டும். சோ்க்கைக்கு தகுதியான மாணவா்களின் தற்காலிக பட்டியல், ஏப். 23-இல் அறிவிக்கப்படும். இறுதி மாணவா் பட்டியல், ஏப். 30-ஆம் தேதியும், காலியிடங்களுக்கான சோ்க்கை பட்டியல், மே- 5-ஆம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

சோ்க்கைக்கான காலி இடங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறை, இட ஒதுக்கீடு போன்ற கூடுதல் விவரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com