தமிழகத்தில் நிறைவடைந்தது பிரசாரம்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் மாலை 7 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழகத்தில் நிறைவடைந்தது பிரசாரம்


தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் மாலை 7 மணியுடன் நிறைவடைந்தது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வரும் செவ்வாய்க்கிழமை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 3, 998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிமுக, திமுக, நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மய்யம் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. 

இறுதிக் கட்ட பிரசாரத்தில் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூரில் பொதுக்கூட்டத்துடன் பிரசாரத்தை நிறைவு செய்தார். இதையடுத்து, தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டும் வாக்கு சேகரித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி எடப்பாடி தொகுதியில் வாக்கு சேகரித்தார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூரில் பொதுக்கூட்டம் நடத்தி வாக்கு சேகரித்தார். டிடிவி தினகரன் கோவில்பட்டியிலும், கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும் இறுதிக் கட்ட பிரசாரம் மேற்கொண்டனர்.

இதுதவிர முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பிரசார விடியோ ஒன்றையும் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டார்.

தேர்தல் பிரசாரம் இரவு 7 மணியுடன் நிறைவடைந்தவுடன், தொகுதிக்கு தொடர்பில்லாத அனைவரும் வெளியேற வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com