பவானி அருகே உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் வாக்களித்தார்

அம்மாபேட்டை ஒன்றியம், காடப்பநல்லூர் ஊராட்சியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் செவ்வாய்க்கிழமை வாக்களித்தார்.
வாக்கினை பதிவு செய்து விட்டு வெளியே வந்து மை வைக்கப்பட்ட விரலை காட்டும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம், மனைவி சரஸ்வதி அம்மாள்

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த காடப்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பி.சதாசிவம். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான, இவர் கேரள மாநில ஆளுநராக பொறுப்பு வகித்தார். தற்போது சொந்த ஊரான காடப்பநல்லூர் கிராமத்தில் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில், காடப்பநல்லூர் கிராமம், ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த  வாக்குச்சாவடியில் மனைவி சரஸ்வதி அம்மாளுடன்  வந்த சதாசிவம், முதல் வாக்கினை செலுத்தினார். 

தொடர்ந்து, அவர் கூறுகையில், 

ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான தேர்தலில் அனைவரும் தவறாமல் தங்களின் வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com