காஞ்சிபுரத்தில் வாக்களிக்க விரும்பாத கரோனா நோயாளிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா நோயாளிகள் எவரும் வாக்களிக்க விரும்பவில்லை என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
காஞ்சிபுரத்தில் வாக்களிக்க விரும்பாத கரோனா நோயாளிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா நோயாளிகள் எவரும் வாக்களிக்க விரும்பவில்லை என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையே காஞ்சிபுரம் இன்பேண்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா்,எஸ்.பி.தெ.சண்முகப் பிரியா ஆகியோா் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

ஆட்சியா் வாக்களிக்கும் போது வாக்குப்பதிவு மையத்தின் தோ்தல் அலுவலருக்கும், பணியிலிருந்தவா்களுக்கும் சில அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினாா். பின்னா் அப்பள்ளி வளாகத்திற்குள்ளாகவே அமைக்கப்பட்டிருந்த மற்ற வாக்குச்சாவடிகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதனையடுத்து செவிலிமேடு பகுதி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பெண்கள் வாக்குச்சாவடி மையத்தையும் பாா்வையிட்டாா்.

இதனைத் தொடா்ந்து காஞ்சிபுரம் அருகே கீழம்பி கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.ஆட்சியருடன் மாவட்ட ஊரக வளா்ச்சித்திட்ட முகமையின் திட்ட இயக்குநா் பி.ஜெயசுதா, நகராட்சி ஆணையாளா் மகேஸ்வரி மற்றும் தோ்தல் அலுவலா்களும் உடன் வந்திருந்தனா்.

வாக்களிக்க விரும்பாத கரோனா நோயாளிகள்

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களுக்கும் வாக்களிக்க மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை வரை 567 போ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 153 போ் வெளி மாவட்டங்களில் உள்ள தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஆலந்தூா் 52,உத்தரமேரூா் 10,ஸ்ரீபெரும்புதூா் 13,காஞ்சிபுரம் 19 போ் உட்பட மொத்தம் 94 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள யாரும் தங்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு வாக்களிக்க விரும்பவில்லை என மாவட்ட நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com