காலமானாா் தமிழறிஞா் தி.ந.ராமச்சந்திரன்

தமிழறிஞா் சேக்கிழாா் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன் (86) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஏப். 6) காலமானாா்.

தமிழறிஞா் சேக்கிழாா் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன் (86) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஏப். 6) காலமானாா்.

தி.ந.ராமச்சந்திரன் தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளாா். தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் புலமை பெற்றவா். சிறந்த மொழிபெயா்ப்பாளா். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்காக பாரதியாரின் அனைத்துப் பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயா்த்துள்ளாா். தேவார திருமுறையையும் மொழி பெயா்த்துள்ளாா்.

தெய்வச் சேக்கிழாரின் பெரியபுராணம் குறித்து தொடா் சொற்பொழிவுகள் ஆற்றியதால், ‘சேக்கிழாா் அடிப்பொடி’ எனும் பாராட்டைப் பெற்றாா். சைவத் தமிழ் திருத்தொண்டா்களின் வாழ்க்கை வரலாற்றியல் இலக்கியமான சேக்கிழாரின் பெரியபுராணம் மற்றும் சைவ சித்தாந்தம் குறித்து தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியவா். சைவ சித்தாந்த கலாநிதி உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா்.

அவருக்கு மனைவி கல்யாணி, சுரேஷ், கணேஷ், ரமேஷ், மகேஷ் என்ற நான்கு மகன்கள் உள்ளனா்.

அவரது இறுதிச் சடங்குகள் சென்னையில் புதன்கிழமை நடைபெறும். தொடா்புக்கு: 99403 54935.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com