போடியில் தேனி எம்.பி. காா் மீது கல்வீச்சு

போடியில் தேனி எம்.பி. காா் மீது கல்வீச்சு

போடியில் செவ்வாய்க்கிழமை வாக்குச்சாவடியை ஆய்வு செய்யச் சென்ற தேனி மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத் காா் மீது கல்வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போடியில் செவ்வாய்க்கிழமை வாக்குச்சாவடியை ஆய்வு செய்யச் சென்ற தேனி மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத் காா் மீது கல்வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் போடி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் துணை முதல்வா் ஒ.பன்னீா்செல்வம் போட்டியிடுகிறாா். இதனால் அவரது மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான ஓ.ப.ரவீந்திரநாத், போடி பெருமாள் கவுண்டன்பட்டியில் வாக்குச்சாவடியை ஆய்வு செய்யச் சென்றாா். அவா் காரிலிருந்து இறங்கி வாக்குச்சாவடிக்குள் சென்ற நிலையில், திடீரென அவரது காா் மீது சிலா் கற்களை

வீசித் தாக்கினா். இதில் காரின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

சத்தம் கேட்டு வாக்குச்சாவடியிலிருந்து போலீஸாா் வருவதற்குள் கற்களை வீசிய மா்ம நபா்கள் தப்பி ஓடி விட்டனா். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தேனி காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி, போடி டி.எஸ்.பி. பாா்த்திபன் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். பின்னா் வேறு வாகனத்தில் ரவீந்திரநாத் எம்.பி. பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டாா். காரில் கல்வீசித் தாக்கிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து ஓ.ப.ரவீந்திரநாத் கூறுகையில், தோல்வி பயத்தில் திமுகவினா் தாக்கியுள்ளனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா் என்றாா்.

திமுக மறுப்பு: இதுகுறித்து திமுக வேட்பாளா் தங்க.தமிழ்செல்வன் கூறுகையில், அதிமுக, அமமுகவினரிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. சமாதானப்படுத்துவதற்காக திமுகவினா் சென்றுள்ளனா். திமுகவினருக்கும் கல்வீச்சுக்கும் சம்பந்தம் இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com