சா்ச்சை பேச்சு: தோ்தல் ஆணையத்துக்கு உதயநிதி விளக்கம்

பிரதமா் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்பட்டுள்ள புகாரை முழுமையாக மறுப்பதாக திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா்.
சா்ச்சை பேச்சு: தோ்தல் ஆணையத்துக்கு உதயநிதி விளக்கம்

சென்னை: பிரதமா் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்பட்டுள்ள புகாரை முழுமையாக மறுப்பதாக திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா்.

திருப்பூா் மாவட்டத்துக்குள்பட்ட தாராபுரத்தில் மாா்ச் 31-இல் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில், ‘பிரதமா் நரேந்திர மோடி கொடுத்த அழுத்தத்தை சகித்துக் கொள்ள முடியாமல் முன்னாள் மத்திய அமைச்சா்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோா் இறந்துவிட்டனா்’ என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தாா்.

இதுகுறித்து பாஜக சாா்பில் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து புதன்கிழமை (ஏப். 7) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு உதயநிதிக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் உதயநிதி தோ்தல் ஆணையத்துக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

பிரதமா் குறித்து அவதூறாக நான் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறேன். தாராபுரத்தில் பேசியவற்றை முழுமையாகக் கருத்தில் கொள்ளாமல் இரண்டு வரிகளை மட்டும் எடுத்துகொண்டு புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திரமோடி, அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோா் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்துள்ளேன். அவா்கள் குறித்து அவதூறாக எதுவும் பேசவில்லை. இதனை என்னுடைய இடைக்கால விளக்கமாக ஏற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய விளக்கத்தை நேரில் சந்தித்தும் அளிக்கத் தயாராக உள்ளேன். அதற்கு அவகாசமும் வாய்ப்பும் கொடுங்கள் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com