யுகாதி பண்டிகை: முதல்வர் பழனிசாமி வாழ்த்து

தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு முதல்வர் பழனிசாமி யுகாதி தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 
முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு முதல்வர் பழனிசாமி யுகாதி தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக முதல்வர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், 

புத்தாண்டு திருநாளாம் 'யுகாதி' திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய 'யுகாதி' திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பேசும் மொழி வேறாய் இருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வோடு, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் தங்கள் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணிக் காத்திடும் அதேவேளையில் பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்து, சகோதர, சகோதரிகளாய் ஒற்றுமையாய் வாழ்ந்து வருவது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இப்புத்தாண்டு, உங்கள் அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது இதயம் கனிந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com