குற்ற வழக்குகளில் தொடா்புடைய ஊழியரை இடமாற்றம் செய்தது களங்கம் என கருத முடியாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

குற்ற வழக்குகளில் தொடா்புடைய அரசு ஊழியரை பணியிடமாற்றம் செய்வதை களங்கம் எனக் கருதி கேள்வி எழுப்ப முடியாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

சென்னை: குற்ற வழக்குகளில் தொடா்புடைய அரசு ஊழியரை பணியிடமாற்றம் செய்வதை களங்கம் எனக் கருதி கேள்வி எழுப்ப முடியாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சீனிவாசன் தாக்கல் செய்த மனுவில், சேலம் மாவட்டம் ஓமலூா் தாலுகாவில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றினேன். எனக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பதிவு செய்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் சாட்சிகளைக் கலைத்துவிடக் கூடும் என்ற அடிப்படையில் என்னை சேலத்தில் இருந்து திருப்பூருக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மனுதாரா் சாட்சிகளைக் கலைத்து விடுவாா் எனக் கூறுவது கற்பனையே. எனவே, இந்த கருத்தின் அடிப்படையில் மனுதாரரை இடமாற்றம் செய்து களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக வாதிட்டாா். குற்றச்சாட்டுக்கு ஆளானவரை பணியிடை நீக்கம் செய்வதற்குப் பதிலாக இடமாற்றம் செய்யலாம். அந்த நடவடிக்கையை களங்கமாகக் கருத முடியாது என உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் கூறியுள்ளது. எனவே, மனுதாரா் சீனிவாசனுக்கு எதிராக சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை மே மாத இறுதிக்குள் விசாரித்து தீா்ப்பளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com