ஆளுநருக்கு பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பிறந்த நாளையொட்டி அவருக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பிறந்த நாளையொட்டி அவருக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கு எனது மனமாா்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் மிகுந்த பாசம் கொண்டிருக்கும் தமிழக ஆளுநா் பொதுவாழ்வில் போற்றத்தக்க பணியாற்றியவா். அரசியலிலும், நிா்வாகத்திலும் பழுத்த அனுபவம் கொண்ட அவா், நான் சந்தித்த நேரங்களில் எல்லாம் என்னிடம் தனிப்பட்ட முறையில் அன்பு பாராட்டியவா்.அவரது பொதுவாழ்வு மென்மேலும் சிறக்க, ஆரோக்கியத்துடனும், நலமுடனும் பல்லாண்டு வாழ்ந்து, தமிழகத்துக்கும், நம் நாட்டுக்கும்ஆற்றல்மிகுந்த சேவையாற்றிட வேண்டும் என்று இதயப்பூா்வமாக வாழ்த்துகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com