பெரியகுளம் அருகே கோஷ்டி மோதல்: இருவருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால், இருவர் அரிவாள் வெட்டுக் காயங்களுடன் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
பெரியகுளம் அருகே கோஷ்டி மோதல்
பெரியகுளம் அருகே கோஷ்டி மோதல்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால், இருவர் அரிவாள் வெட்டுக் காயங்களுடன் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள இ. புதுக்கோட்டை கிராமத்தில் குடியிருந்து வருபவர் கருப்பசாமி இவரது மனைவியும் மகளும் நேற்று இரவு வீட்டிலிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ராஜா என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் நின்றபடி வெளிச்சத்தை கருப்பசாமியின் வீட்டில் பாய்ச்சியுள்ளார். 

அப்போது கருப்பசாமி மனைவியும் மகளும் லைட்டை அமர்த்துமாறு கூறியுள்ளதாகத் தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக கருப்பசாமி குடும்பத்தாருக்கும் ஜெகநாதன் குடும்பத்தாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோஷ்டி சண்டையாக மாறியது. 

இதில் இரண்டு தரப்பிலும் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் கருப்பசாமி தரப்பில் ஜெகநாதன் என்பவருக்கும். ராஜா தரப்பில் ராஜா மற்றும் மொக்கசாமி ஆகியோருக்கு ரத்த காயம் ஏற்பட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  ஜெகநாதன் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இரு தரப்பில் நடந்த கோஷ்டி சண்டை சம்மந்தமாக பெரியகுளம் காவல்துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில் இன்று காலையில் கருப்பசாமி மற்றும் பிரபு ஆகியோர் அரிவாளால் பெரியசாமி மகன் தெய்வேந்திரன், மொக்கசாமி மகன் காமேஷ் ஆகியோரை நேருநகர் பகுதியில் வழிமறித்து அறிவாளால் வெட்டி தாக்கியதில் தெய்வேந்திரன் மற்றும் காமேஷ்க்கு தலை மற்றும்- கை ஆகிய பகுதியில் வெட்டு காயத்துடன் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

அரிவாளால் வெட்டிய பிரபு மற்றும் கருப்பசாமி மீது பெரியகுளம் வடகரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com