கேரள எல்லைக்குச் செல்ல மருத்துவப் பரிசோதனை: பெண் தொழிலாளர்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம் கேரள எல்லைக்குச் செல்ல மருத்துவப் பரிசோதனையை கட்டாயமாக்கியதைக் கண்டித்து பெண் தொழிலாளர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள்

தேனி மாவட்டம் கேரள எல்லைக்குச் செல்ல மருத்துவப் பரிசோதனையை கட்டாயமாக்கியதைக் கண்டித்து பெண் தொழிலாளர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம, நகரப் பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆண், பெண் கூலித் தொழிலாளர்கள் சுமார் 800க்கும் மேற்பட்ட ஜீப்புகளில் கேரளப் பகுதிகளான குமுளி, சக்குபள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், மாலி, கட்டப்பனை, கம்பம்மெட்டு பகுதிகளிலுள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு கூலிவேலைக்கு சென்று திரும்புகின்றனர். 

தற்போது கரோனா தொற்று இரண்டாம் கட்ட தாக்கத்தால் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளம்  செல்வோருக்கு தமிழக- கேரள எல்லைப்பகுதியான கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி பகுதியில் கேரள அரசு இ-பாஸ் கட்டாயமாக்கி உள்ளது.

இதனால் தோட்டத் தொழிலாளர்கள் ஆறுமாத கால இ-பாஸ் பெற்று கடந்த ஒரு வாரமாக வேலைக்குச் சென்று வருகின்றனர். 

ஆனால் கம்பம்மெட்டு எல்லைப் பகுதியில் இ-பாஸ் உடன் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதற்கான சான்றிதழும் இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் எனக்கூறி, பரிசோதனை சான்றிதழ் இல்லாமல் பஸ், கார், பைக்குகளில் சென்றவர்களை புதன்கிழமை கேரள காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். 

இந்நிலையில் இன்று காலை கம்பம்மெட்டுட்டு சோதனைச் சாவடியில், கேரள காவல்துறையினர் தோட்டத் தொழிலாளர்களிடம் கரோனா பரிசோதனைச் சான்றிதழ் இல்லை என திருப்பி அனுப்பி உள்ளனர். 

இதனால் திரும்பிய தொழிலாளர்கள், கம்பம் மெட்டுசாலை சிலுவைக்கோவில் அருகே புறவழிச்சாலை சந்திப்பில் வாகனங்களை நிறுத்தி சாலையில் அமர்ந்து  மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த கம்பம் வடக்கு காவல்துறையினர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

கேரள காவல்துறையினர் முன் அறிவிப்பின்றி சான்றிதழ் கேட்பதால் கொடுக்க முடியவில்லை என தொழிலாளர்கள் கூறினர். இதையடுத்து தொழிலளர்களை எச்சரிக்கை செய்து, வியாழக்கிழமை முதல் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் எனக்கூறி புதன்கிழமை மட்டும் செல்ல அனுமதி கொடுத்தனர்.

இச்சம்பவத்தால் கம்பம் புறவழிச்சாலை சிலுவைக்கோவில் அருகே சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக  போக்குவரத்து பாதித்தது. 

இதுகுறித்து கேரள காவல்துறையினர் கூறுகையில், கம்பம்மெட்டு கருணாபுரம் பகுதி கண்டெய்ன்ட்மென்ட் ஜோனாக (கட்டுப்பாட்டு பகுதி) அறிவிக்கப்பட்டு உள்ளதால், கரோனா பரிசோதனை முடிவுகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றனர். 

தொழிலாளர்கள் சார்பில் செந்தில் என்பவர் கூறுகையில், தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனையில் இருமாவட்ட ஆட்சியர்களும் பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com