சென்னையில் வெள்ளியன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 23) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளியன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு
சென்னையில் வெள்ளியன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 23) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், சென்னையில் ஏப்ரல் 23-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் திருவேற்காடு, அத்திப்பட்டு, செம்பியம், திருமுடிவாக்கம், ஆவடி உள்ளிட்டப் பகுதிகளில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவேற்காடு - கன்னப்பாளையம், மேட்டுபாளையம், குப்பத்துமேடு, காவல்சேரி, அன்னைக்கட்டுசேரி, சோரஞ்சேரி மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

அத்திப்பட்டு - அத்திப்பட்டு புதுநகர், கே.ஆர். பாளையம், காட்டுப்பள்ளி, நந்தியம்பாக்கம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
செம்பியம் - டி.எச். சாலை, டீச்சர்ஸ் காலனி, ராஜா தெரு, காமராஜ் சாலை, கட்டபொம்மன் மெயின் ரோடு, ஜவகர் தெரு, ஈ.பி. சாலை, இந்திரா நகர் மேற்கு, அம்பேத்கர் நகர், தபால் பெட்டி, காந்தி தெரு, பெரம்பூர் நெடுஞ்சாலை, எ.ஸ.எஸ்.வி. கோயில் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
திருமுடிவாக்கம் - வழுதலம்பேடு, நத்தம், தேவி நகர், வர்ணா நகர், சம்பந்தம் நகர், சந்தோஷ் அவென்யூ, மேத்தா நகர் 11 தெரு கிழக்கு மேற்கு தெரு.
ஆவடி - கமலம் நகர், ஆர்.சி. அப்பார்ட்மெண்ட், ஜெயராம் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரங்கள்: 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com