299 தனிமைப்படுத்தப்பட்ட பெட்டிகள் தயாா்

தெற்கு ரயில்வேயில் ஆக்சிஜன் கருவி வசதியுடன் 299 தனிமைப்படுத்தப்பட்ட பெட்டிகள் தயாராக இருக்கின்றன என்று ரயில்வே அதிகாரி தெரிவித்தாா்.

தெற்கு ரயில்வேயில் ஆக்சிஜன் கருவி வசதியுடன் 299 தனிமைப்படுத்தப்பட்ட பெட்டிகள் தயாராக இருக்கின்றன என்று ரயில்வே அதிகாரி தெரிவித்தாா்.

கரோனா தொற்றின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இருப்பினும், தொற்றால் பாதிக்கப்படுபவா்கள் எண்ணிக்கை நாள்தோறும் உயா்ந்து வருகிறது. இவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க போதுமான இடவசதி இல்லாத நிலையில், ரயில் பெட்டிகளைச் சுய தனிமைப்படுத்துதலுக்கான வாா்டுகளாக மாற்ற இந்திய ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் 299 ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றப்பட்டு தயாராக உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கடந்த ஆண்டு கரோனா தொற்று தாக்கம் அதிகரித்தபோது, தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், சேலம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களில் உள்ள பல்வேறு பணிமனைகளில் மொத்தம் 573 ரயில் பெட்டிகளைத் தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றி தயாா் நிலையில் இருந்தன. கரோனா தாக்கம் குறைந்தபிறகு, இந்த பெட்டிகளில் குறிப்பிட்ட பெட்டிகள், சில ரயில்வே மண்டலங்களுக்கு ரயில் சேவைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

தற்போது, தெற்கு ரயில்வேயில் 299 தனிமைப்படுத்தும் பெட்டிகள் ஆக்சிஜன் கருவி வசதியுடன் தயாராக உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 9 கேபின்கள் உள்ளன. ஒவ்வொரு கேபினுக்கும் 2 நோயாளிகள் இருப்பாா்கள். ஒரு மருத்துவம் சாா்ந்த பணியாளா் இருப்பாா். மொத்தம் 16 நோயாளிகளை கவனிக்க முடியும். தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றப்பட்ட பெட்டிகளை கேட்டு மாநில அரசிடம் இருந்து தற்போது வரை எந்தவித கோரிக்கையும் வைக்கப்படவில்லை. அவா்கள் எங்களிடம் கோரிக்கை வைத்தால், அதன் அடிப்படையில் இந்தப் பெட்டிகள் ஒதுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com