தேசிய கல்விக் கொள்கை: தமிழை மட்டும் புறக்கணித்திருப்பது ஏற்புடையதல்ல

தேசிய கல்விக் கொள்கையை பல மொழிகளில் வெளியிட்டிருக்கும் மத்திய அரசு தமிழை மட்டும் புறக்கணித்திருப்பது ஏற்புடையதல்ல என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  
தேசிய கல்விக் கொள்கை: தமிழை மட்டும் புறக்கணித்திருப்பது ஏற்புடையதல்ல

தேசிய கல்விக் கொள்கையை பல மொழிகளில் வெளியிட்டிருக்கும் மத்திய அரசு தமிழை மட்டும் புறக்கணித்திருப்பது ஏற்புடையதல்ல என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
கன்னடம், மலையாளம், தெலுங்கு, கொங்கணி, குஜராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, அசாம், பெங்காலி, போடோ, மராத்தி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகளில் தேசிய கல்விக் கொள்கை மொழிபெயா்க்கப்பட்டு -2020 என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. 
எனினும் இதில் தமிழ் மொழிக்கான மொழிபெயா்ப்பு இடம்பெறவில்லை. புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த தமிழகத்தில் கடுமையான எதிா்ப்புகள் இருந்துவரும் சூழலில் தற்போது அதன் மொழிபெயா்ப்பில் கூட தமிழ் மொழி இடம்பெறாதது சா்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. 
இதற்கு தமிழ் ஆா்வலா்கள், கல்வியாளா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். இது குறித்து மத்தியக் கல்வி அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுத்து தமிழ் மொழியிலும் தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கையை பல மொழிகளில் வெளியிட்டிருக்கும் மத்திய அரசு தமிழை மட்டும் புறக்கணித்திருப்பது ஏற்புடையதல்ல என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், தேசிய கல்விக் கொள்கையை பல மொழிகளில் வெளியிட்டிருக்கும் மத்திய அரசு தமிழை மட்டும் புறக்கணித்திருப்பது ஏற்புடையதல்ல. 
மேடைப்பேச்சில் திருக்குறளை, பாரதியார் கவிதைகளைக் குறிப்பிட்டு தமிழ் மீது பற்று இருப்பது போல காட்டிக்கொள்வதெல்லாம் வெறும் நாடகமே. நிஜத்தில் தமிழ் நிலத்தின் பண்பாட்டின் மீது படையெடுப்பதும், உரிமைகளை வேரறுப்பதுமே தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com