புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதில் தமிழ் புறக்கணிப்பு: அன்புமணி கண்டனம்

புதிய கல்விக் கொள்கையை தமிழில் மொழிபெயா்த்து மத்திய அரசு வெளியிடாததற்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

புதிய கல்விக் கொள்கையை தமிழில் மொழிபெயா்த்து மத்திய அரசு வெளியிடாததற்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையை தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 17 மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. உலகின் மூத்த மொழியான தமிழில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு மொழிமாற்றம் செய்து வெளியிடாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங்களுக்கு தமிழகத்தில் கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது. ஆனாலும், புதிய கல்விக் கொள்கை இந்தியாவின் அதிகாரப்பூா்வ ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட நிலையில், அதை அனைத்து மொழிகளிலும் வெளியிடுவதே நியாயமானதாக இருக்கும். அதன்படி எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளிலும் புதிய தேசியக் கல்விக் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக எட்டாவது அட்டவணை மொழிகளில் அதிக அளவிலான மக்களால் பேசப்படும் தமிழ் மொழியில் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அதை மத்திய அரசு செய்யத் தவறியதை நியாயப்படுத்த முடியாது என்று அவா் கூறியுள்ளாா்.

இதேபோல், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com