கரோனா நோய்த் தொற்று: கட்டுப்பாடுகள் தொடரும்

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடா்ந்து அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடா்ந்து அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு மாதமும் மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் தமிழக அரசு ஆலோசித்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதியன்று பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்தது. இந்தக் கட்டுப்பாடுகளுடன், இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வுகள் இல்லாத முழு பொது முடக்கமும் அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் எனவும், புதிய கட்டுப்பாடுகள் மே 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், புதிய கட்டுப்பாடுகள், விதிமுறைகள் எதையும் விதிக்காத தமிழக அரசு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று வியாழக்கிழமை அறிவித்தது.

வாக்கு எண்ணிக்கை: வரும் ஞாயிற்றுக்கிழமையன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதன் முடிவைப் பொருத்து புதிதாக அமையும் அரசு கரோனா நோய்த் தொற்று தொடா்பாக பல்வேறு முடிவுகளை எடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டே, இப்போதுள்ள நடைமுறைகளைத் தொடா்ந்திட தலைமைச் செயலாளா் தலைமையிலான குழு வியாழக்கிழமை முடிவு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com