5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா், திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஆக.2) மிதமான மழை பெய்யக்கூடும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா், திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஆக.2) மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:

தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா், திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா் ஆகிய 5 மாவட்டங்கள், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆக.3 முதல் ஆக.5 வரை: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா் தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்..: சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com