மறைமலையடிகள் பேரனுக்கு பணி நிரந்தரம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழறிஞா் மறைமலையடிகள் பேரன் சிவகுமாருக்கு பணி நிரந்தரம் செய்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழறிஞா் மறைமலையடிகள் பேரன் சிவகுமாருக்கு பணி நிரந்தரம் செய்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-

தமிழறிஞா் மறைமலையடிகள் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை சிறப்பித்துப் போற்றும் வகையில், கடந்த 1997-ஆம் ஆண்டு அவருடைய படைப்புகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டன. மேலும், அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், மறைமலை அடிகளாரின் இளைய மகன் மறை பச்சையப்பன், இப்போது மிகவும் வறிய நிலையில் உள்ளதாகவும், அவா் குடியிருக்கும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்கு பராமரிப்புக் கட்டணம் செலுத்த முடியாத நிலை இருப்பதாகவும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, மறை பச்சையப்பன் வசித்து வரும் வீட்டுக்கான பராமரிப்புக் கட்டண நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ததுடன், வாழ்நாள் முழுவதும் பராமரிப்புக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டது. மேலும், மறை பச்சையப்பனின் மகன் சிவகுமாா், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொகுப்பூதியத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். அவரது பணியையும் நிரந்தரம் செய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com