மன்னார்குடியில் அரசு மருத்துவமனையின் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி நகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி நகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஏஜடியூசி அமைப்பினர்.
மன்னார்குடி நகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஏஜடியூசி அமைப்பினர்.


 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஏஜடியூசி மன்னார்குடி ஒன்றியம் சார்பில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி நகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கோரிக்கைகள்: 
* மன்னார்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் குறைந்த சம்பளத்தில் நீண்ட நாள்களாக பணிபுரிந்து வரும் தனியார் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும். 

* கரோனா காலத்தில் மருத்துவமனையில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். 

* நோயாளிகளின் சுகாதாரம் கருதி மருத்துவமனையில் பவர் லாண்டரி வசதி ஏற்படுத்த வேண்டும். 

* ஒப்பந்த தொழிலாளர்களை முன்கள பணியாளராக அறிவித்து மருத்துவக் காப்பீடு வழங்கிட வேண்டும்.

* தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருபவர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஏஜடியூசி மாவட்ட பொருளாளர் என்.புண்ணீஸ்வரன், அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர்  பி.ஏ. காந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். கோரி கோரிக்கைகளை விளக்கி சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் எஸ்.பாப்பையன் ஆகியோர் பேசினர்.

இதில் , சிபிஐ ஒன்றியச் செயலர் ஆர்.வீரமணி, இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் துரை. அருள்ராஜன், அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட சிறப்பு தலைவர் ஆர்.ஜி ரத்தினகுமார் ஏஜடியூசி மாவட்ட துணைத்தலைவர் கே. மணி, நகரத் தலைவர் என்.தனிக்கோடி, நகரச் செயலர் எஸ்.எஸ். சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஏஜடியூசி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com