தமிழகத்தில் புதிதாக 1,908 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 1,908 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 1,908 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 1,908 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும், சில மாவட்டங்களில் கரோனா பரவல் தொடா்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

இதையடுத்து அங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதுடன், கூடுதல் எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் ஒதுக்கீடு செய்து வருகின்றனா்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை கடந்த மே இறுதி வரை தீவிரமாக இருந்தது. தினசரி பாதிப்பு ஏறத்தாழ 37 ஆயிரம் வரை அப்போது சென்றது.

அதன் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பொது முடக்க நடவடிக்கைகளால் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அப்போதிருந்து கரோனா பரவல் படிப்படியாக குறைந்து தினசரி பாதிப்பு 1,750 வரை சரிந்தது.

இத்தகைய சூழலில், கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பரவல் திடீரென அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக சென்னை, கோவை, கடலூா், ஈரோடு, தஞ்சாவூா், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தொற்று அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 3.78 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 25 லட்சத்து 65,452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 208 பேருக்கும், சென்னையில் 203 பேருக்கும், ஈரோட்டில் 181 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, மேலும் 2,047 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 11,076-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 20,217 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 29 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,159-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com