மக்களைத் தேடி மருத்துவம்: எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைச்சர் நாசர் தொடக்கிவைத்தார்

ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் பால்வளத்துறை அமைச்சர் மு.நாசர் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை தொடக்கி வைத்தார்
மக்களைத் தேடி மருத்துவம்: எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைச்சர் நாசர் தொடக்கிவைத்தார்

ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் பால்வளத்துறை அமைச்சர் மு.நாசர் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை தொடக்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள தொளவேடு  துணை சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட செல்லியம்மன் கண்டிகை கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை பால்வளத்துறை அமைச்சர் மு.நாசர் குத்துவிளக்கேற்றி இன்று தொடக்கி வைத்தார். 

45 வயதுக்கு மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம் முதலியவை கொண்டவர்களே கண்டறியப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் ஆன உதவிகளை வழங்கியும் மூளை வளர்ச்சி குன்றியவர்கள் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் கொண்டவருக்கு பிசியோதெரபிஸ்ட் மூலம் மருத்துவம் அளிக்கும் திட்டத்தையும், சிகிச்சை பெறுவதற்கு அவர்கள் வீட்டிற்கே சென்று வழங்கும் திட்டத்தையும் தொடக்கி வைத்தார்.

மேலும் அதன் மூலம் வீடுகளுக்கே சென்று மருத்துவம் செய்ய ஒரு வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்த வாகனத்தில் ஒரு சிறப்பு செவிலியர் பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்டோர் 24 மணி நேரமும் இருப்பார்கள் என கூறினார்

எல்லாபுரம் ஒன்றியத்தில் மொத்தம் 24 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. அவற்றில் தலா இரண்டு செவிலியர்கள் உள்ள நிலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இந்த வாகனம் எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு வீடுகளுக்கே சென்று வயது முதியவருக்கு உதவ செயல்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜ் மற்றும் பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரசேகர் மாவட்ட ஊரக வளர்ச்சி தலைவர் உமா மகேஸ்வரி, திருவள்ளூர் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார அலுவலர் பிரபாகரன், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com