மணப்பாறை அருகே 'மக்களைத்தேடி மருத்துவம்': அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் தொடக்கிவைப்பு

மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் 'மக்களைத்தேடி மருத்துவம்' திட்டத்தினை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
மணப்பாறை அருகே 'மக்களைத்தேடி மருத்துவம்': அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் தொடக்கிவைப்பு

மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் 'மக்களைத்தேடி மருத்துவம்' திட்டத்தினை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 'மக்களைத்தேடி மருத்துவம்' திட்டத்தினை கிருஷ்ணகிரி மாவட்ட சூலகிரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.

அதனையடுத்து திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, சென்னை, கோயமுத்தூர், திருநல்வேலி, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் காணொளி காட்சி மூலம், இத்திட்டத்தை முதல்வர் துவக்கி வைக்க அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அதனை வரவேற்றனர்.

அதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் திட்டத்தினை காணொளி மூலம் முதல்வர் தொடங்கி வைத்ததையடுத்து, நகரப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்.மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து திட்டத்தினை தொடக்கி வைத்தனர்.

பின் மக்களைத்தேடி மருத்துவம் திட்ட வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர்கள், பயனாளிகளின் வீடு தேடி சென்று மருத்துவ பெட்டகத்தை வழங்கினர். முடக்குவாதத்தில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கு வீடு தேடி சென்று அளிக்கப்படும் இயல்முறை சிகிச்சையினை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையினர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அனைத்துத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com