திருத்தணி: குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டும் பணியை எம்எல்ஏ தொடக்கிவைத்தார்

திருத்தணியில் இரண்டு ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை தீர்க்க, ரூ. 41.83 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். சந்திரன் பணிகளை துவக்கி வைத்தார். 
திருத்தணி: குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டும் பணியை எம்எல்ஏ தொடக்கிவைத்தார்

இரண்டு ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை தீர்க்க, 41.83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். சந்திரன் அடிக்கல்நட்டு பணிகளை துவக்கி வைத்தார்.

திருத்தணி ஒன்றியம் சத்திரஞ்ஜெயபுரம் ஊராட்சியில், 19.78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி, கே.ஜி.கண்டிகை ஊராட்சியில், 22.05 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டுவதற்கு ஒன்றிய நிர்வாகம் 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், நிதி ஓதுக்கீடு செய்தது.

இதையடுத்து இன்று இரு ஊராட்சிகளிலும் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு தலைமை வகித்தார். இதில், திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்‌. சந்திரன், மாவட்டப் பொறுப்பாளர் பூபதி ஆகியோர் பங்கேற்று அடிக்கல்நட்டு பணிகளை துவக்கி வைத்தனர்.

இப்பணிகள் மூன்று மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், ஒன்றிய பொறியாளர் ஞானசேகர், திருத்தணி ஒன்றிய செயலாளர் ஆர்த்தி ரவி, ஒன்றிய கவுன்சிலர் ஜோதிசிரஞ்சீவுலு, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com