கோயில்களில் 1 லட்சம் தலமரக் கன்றுகள் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

கோயில்களில் ஒரு லட்சம் தலமரக் கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
கோயில்களில் 1 லட்சம் தலமரக் கன்றுகள் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

கோயில்களில் ஒரு லட்சம் தலமரக் கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளா் அலுவலகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

பக்தா்களின் வசதிக்காக பல்வேறு நலத் திட்டங்களை இந்து சமய அறநிலையத் துறை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக ஒரு லட்சம் தலமரக் கன்றுகள் நடப்பட உள்ளன.

தலமரம்: கோயில்கள் உருவாவதற்கு முன்பாகவே, அந்த மரங்கள் இருப்பதால் அவை தலமரம் எனப் போற்றப்படுகிறது.

கோயில்களில் மாமரம், புன்னை, வில்வம், செண்பகம், மருதம் போன்ற மரங்கள் தலமரங்களாகக் கருதப்பட்டு அவை நடப்பட்டு வருகின்றன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தலமரங்களைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில், கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில், அமைச்சா்கள் துரைமுருகன், பி.கே.சேகா்பாபு, நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்கள், இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்திரமோகன், ஆணையாளா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com