மாங்காட்டில் விரைவில் பேருந்து நிலையம்: அமைச்சர் பி.கே.சேகர் பாபு

மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் விரைவில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திங்கள்கிழமை தெரிவித்தார்.
மாங்காட்டில் விரைவில் பேருந்து நிலையம்: அமைச்சர் பி.கே.சேகர் பாபு
மாங்காட்டில் விரைவில் பேருந்து நிலையம்: அமைச்சர் பி.கே.சேகர் பாபு


காஞ்சிபுரம்: மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் விரைவில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திங்கள்கிழமை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான 8 ஏக்கர் நிலத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். 

ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியது.. மாங்காடு பேரூராட்சியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே வைக்கப்பட்டது. இதன்படி முதல்வரும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து அதற்குண்டான திட்டப்பணிகளை முடுக்கி விடும்படி உத்தரவிட்டிருந்தார்.

இதனடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், காமாட்சி அம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர் ஆகியோருடன் வந்து இடத்தைப் பார்வையிட்டோம். உயர்நீதிமன்றமும் இந்த இடத்தில் இருக்கும் கழிவுநீரை அகற்றி ஒரு வரைவுத் திட்டம் தயாரித்து, எப்போதும் தண்ணீர் நிற்காத அளவுக்கு மேம்படுத்த வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்நிலையில் இத்திட்டத்தை நிறைவேற்ற போதுமான நிதி ஆதாரம் இல்லாமல் கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்துள்ளது.

இத்திட்டத்துக்கு தேவையான அடிப்படைத் தேவைகளை ஆய்வு செய்து இதன் தொடர்ச்சியாக ஓரிரு மாத காலங்களுக்குள் வரைவுத் திட்டத்தையும் புதுப்பித்து இதற்குண்டான டெண்டரும் கோரப்படும்.இப்பணிகளை விரைந்து செயல்படுத்தி முதல்வரின் கவனத்துக்கும் எடுத்துச் சென்று போதிய நிதி ஆதாரத்தை பெற்று பேருந்து நிலையம் விரைவில் அமைக்கப்படும் எனவும் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

ஆய்வின் போது இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்,ஆட்சியர் மா.ஆர்த்தி,ஸ்ரீபெரும் புதூர் எம்.எல்.ஏ.கு.செல்வப்பெருந்தகை ஆகியோரும் உடன் இருந்தனர்.

மாங்காடு பேரூராட்சியில் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை ஆய்வு செய்யும் அமைச்சர்கள் பி,கே.சேகர்பாபு மற்றும் தா.மோ.அன்பரசன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com