மத்திய அரசின் விருதுக்கு தமிழகத்தின் 8 காவலர்கள் தேர்வு

குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்தியவர்களுக்கான மத்திய அரசின் விருதுக்கு தமிழகத்தின் 8 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்தியவர்களுக்கான மத்திய அரசின் விருதுக்கு தமிழகத்தின் 8 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று, குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்தியவர்களுக்கான விருதை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கும். இந்நிலையில், இந்தாண்டிற்கான பட்டியலில் 8 தமிழக காவலர்கள் தேர்வாகியுள்ளனர்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த புலன் விசாரணை விருதுக்கு 152 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதில், சிபிஐ பிரிவில் 15, மத்தியப் பிரதேசத்தில் 11, மகாராஷ்டித்தில் 11, உத்தரப்பிரதேசத்தில் 10, கேரளத்தில் 9, ராஜஸ்தானில் 9, தமிழகத்தில் 8, பிகாரில் 7, குஜராத்தில் 6, கர்நாடகத்தில் 6 மற்றும் தில்லியில் 6 காவலர்கள் தேர்வாகியுள்ளனர். 

தமிழகத்தை சேர்ந்த சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைசெல்வி, மணிவண்ணன், சிதம்பரமுருகேஷன், கண்மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com