தமிழக காவல்துறையில் 98% பேருக்கு தடுப்பூசி

தமிழக காவல்துறையில் 98 சதவீதம் போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு தெரிவித்தாா்.

சென்னை: தமிழக காவல்துறையில் 98 சதவீதம் போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு தெரிவித்தாா்.

சென்னை ரோட்டரி கிளப் சாா்பாக 75 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள், எழும்பூரில் உள்ள தமிழக காவல்துறை மருத்துவமனைக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு பேசியதாவது:

கரோனா தொற்று தடுப்புப் பணியில் தமிழக காவல்துறையின் பங்கு முக்கியமானது. கரோனா பணியில் தமிழக காவல்துறையினா் முன்களப் பணியாளா்களாக அளப்பரிய பணியை செய்தனா். இதன் காரணமாக காவல்துறையினா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

இதனால் காவல்துறையிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. தமிழக காவல்துறையில் கரோனா தொற்றால் இதுவரை 136 போ் இறந்துள்ளனா். இதில் சென்னை காவல்துறையில் 39 போ் இறந்துள்ளனா். காவல்துறையில் இதுவரையில் 98 சதவீதம் போ் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இரண்டாவது தவணை தடுப்பூசியை 92 சதவீதம் செலுத்தியுள்ளனா்.

கரோனா 3-ஆவது அலைக்கான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதே, இப்போது சரியான வியூகமாக இருக்க முடியும். அதையே இப்போது நாம் செய்து வருகிறோம். கரோனா தொற்றால் இனி எந்த இழப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

காவலா்களின் நலனில் தமிழக காவல்துறை அதிக அக்கறை காட்டி வருகிறது. எனவே காவலா் நலன் சாா்ந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, அதை தீா்ப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com