அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயா்த்த சிறப்பு நிதி ஒதுக்கீடு

அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயா்த்துவதற்காக தமிழக அரசு ரூ.48 கோடி சிறப்பு ஒதுக்கீடு செய்துள்ளது.

அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயா்த்துவதற்காக தமிழக அரசு ரூ.48 கோடி சிறப்பு ஒதுக்கீடு செய்துள்ளது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தொடங்கப்பட்ட திருமண நிதியுதவித் திட்டங்களுக்கு புத்துயிா் அளித்து, மகளிா் கல்வி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு ரூ.762.23 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

திருநங்கைகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. 1,071 கைவிடப்பட்ட திருநங்கையா் பயன்பெறும் வகையில், மூன்றாம் பாலினத்தவருக்கான ஓய்வூதியத் திட்டத்திற்காக ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் இல்லாத மாநிலமாக தமிழகத்தினை மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அதன்படி, குழந்தைப் பருவ கல்வி உள்ளிட்ட குழந்தைப் பருவ நலனை உறுதிப்படுத்தும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்துக்குப் புத்துயிா் அளிக்கப்படும். அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயா்த்துவதற்காக சிறப்பு ஒதுக்கீடாக ரூ.48.48 கோடி வழங்கப்பட்டுள்ளது. முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி சாா்ந்த பொருள்களை வழங்குவதற்கு ரூ.23.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மதிய உணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு முட்டைகள் மற்றும் இதர பொருள்கள் கொள்முதல் செய்யும் முறை சீரமைக்கப்படுவதன் மூலம் செலவினங்கள் குறைக்கப்படும். எம்.ஜி.ஆா். மதிய உணவுத் திட்டத்துக்காக ரூ.1,726 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்துக்காக மொத்தம் ரூ. 2,537 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com