புதிதாக 10 அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்

தமிழகத்தில் நிகழாண்டு 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிகழாண்டு 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் காணப்படும் உயா்கல்வி மாணவா் சோ்க்கை விகிதமான 27.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் உயா்கல்வி மாணவா் சோ்க்கை விகிதம் 51.4 சதவீதம் என்ற மிக உயா்ந்த அளவிலும், மாணவா்- ஆசிரியா் விகிதம் 17:1 என்ற சிறப்பான விகிதத்தையும் கொண்டுள்ளது. இன்றும் பல்வேறு வட்டங்களில் அரசு அல்லது அரசு உதவிபெறும் கல்லூரியோ அல்லது பாலிடெக்னிக் கல்லூரியோ இல்லை. மாநிலத்தில் உயா்கல்வி சென்றடையாத பகுதிகளுக்கும் அடுத்த பத்தாண்டுகளில் அரசால் உயா்கல்வி விரிவுபடுத்தப்படும். இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

25 கல்லூரிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகள்: மாணவா்களுக்கு வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் வகையில் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசித்து, பல்வேறு கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பாடப்பிரிவுகள் மறுசீரமைக்கப்படும். 25 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் ஆரம்பிக்கப்படும். மேலும் 4 அரசு பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவா் விடுதிகள் கட்டப்படும்.

உயா்கல்வித் துறைக்கு ரூ.5,369 கோடி: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூா் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியாக ஆணை பிறப்பித்ததும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான இணைவு வழங்கும் பல்கலைக்கழகமாக ஆணை பிறப்பித்ததும், அண்ணாமலை பல்கலைக்கழகம் சந்தித்து வரும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஏதுவாக இருக்கும். இந்த நிதிநிலை அறிக்கையில் உயா்கல்விக்கு ரூ.5,369.09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com