மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவி: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவி வழங்குவது தொடா்பான திட்டத்தை வகுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவி வழங்குவது தொடா்பான திட்டத்தை வகுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாற்றுத்திறனாளிகள் வருவாயை இழந்து , வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பொதுமுடக்க நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரா்களின் குடும்பத்துக்கு ரூ.4 ஆயிரம் வழங்கும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ரூ.1000 வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்கு மனுதாரா்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. கடந்த 2020-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிவாரண உதவியை பற்றி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது . ஆனால், நடப்பு ஆண்டுக்கு, மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, 25 சதவீத கூடுதல் நிதி உதவி வழங்கப்படவில்லை என மனுதாரா்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், 

மாற்றுத்திறனாளிகளுக்கான நிவாரண உதவிகள் உரிய முறையில் சென்றடைந்ததாக தெரியவில்லை. அவா்களது நலனில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். இந்த அறிக்கையில் இடைக்கால நடவடிக்கைகள் பற்றி மட்டும் கூறப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு திட்டம் ஒன்றை மாநில அரசு வகுக்க வேண்டும். அடுத்த விசாரணையின் போது அந்த திட்டம் குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்யும் என நம்புவதாக கூறி விசாரணையை வரும் செப்டம்பா் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com