அடுத்த 100 நாள்களில் என்ன செய்யப் போகிறேன்? மு.க. ஸ்டாலின் உரை

வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்த 100 நாள்களில் பணிகள் இருக்கும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அடுத்த 100 நாள்களில் என்ன செய்யப் போகிறேன்? மு.க. ஸ்டாலின் உரை
அடுத்த 100 நாள்களில் என்ன செய்யப் போகிறேன்? மு.க. ஸ்டாலின் உரை


சென்னை: திமுக தலைமையிலான தமிழக அரசு ஆட்சியமைத்து 100 நாள்களைக் கடந்துவிட்ட நிலையில், வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்த 100 நாள்களில் பணிகள் இருக்கும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இன்று தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் தாக்கல் நிறைவு பெற்ற பிறகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது,  கடந்த தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்கள் கூட தற்போது தேர்தல் நடத்தினால் வாக்களிப்பார்கள். எனவே, திமுக அரசின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

100 நாள்களை நிறைவு செய்ததற்கு நீங்கள் பாராட்டுகிறீர்கள். ஆனால், அடுத்து வரும் காலம் பற்றியே எனது நினைப்பு இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து முதல் ஒரு மாதம் ஆம்புலன்ஸ் சத்தம் அதிகமாகக் கேட்டது. மருத்துவமனையில் படுக்கை இல்லை, ஆக்சிஜன் இல்லை என அடுத்தடுத்த பிரச்னைகள் வந்தன. கரோனாவைத் தடுக்க வார் ரூம் அமைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. வருங்கால சந்ததியினர் நமது அரசின் சாதனைகளைப் பற்றி பெருமையாக பேச வேண்டும்.

நம்பிக்கை தரும் நாள்களாக 100 நாள் ஆட்சி அமைந்துள்ளது. வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்த 100 நாள்களில் பணிகள் இருக்கும். கருணாநிதி இருந்து செய்ய வேண்டியதை அவர் மகனாக இருந்து நான் நிச்சயமாக செய்வேன். இந்த 100 நாளில் திமுக அரசு செய்த சாதனையைத்தான் பெரிய சாதனையாகக் கருதுகிறேன் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com