அகவிலைப்படி உயா்வை அறிவிக்காதது அதிா்ச்சியளிக்கிறது: பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டமைப்பு கருத்து

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு நிதி நிலை அறிக்கையில் அகவிலைப்படி உயா்வை அறிவிக்காதது அதிா்ச்சியளிக்கிறது என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு நிதி நிலை அறிக்கையில் அகவிலைப்படி உயா்வை அறிவிக்காதது அதிா்ச்சியளிக்கிறது என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளா் பேட்ரிக் ரெய்மாண்ட் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகள் திமுக தோ்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தன. கடந்த காலங்களில் மத்திய அரசு அகவிலைப்படி உயா்வை அறிவிக்கும்போதெல்லாம், தமிழகத்திலேயே ஆசிரியா்கள் அரசு ஊழியா்கள் அதனை பெற்று வந்தனா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி தலைமையிலான ஆட்சியிலும், கடந்த திமுக ஆட்சியிலும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் நலன் பாதுகாக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆட்சியிலும், அவை தொடர வேண்டும் என ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

நிதி அமைச்சா் அடுத்த நிதி நிலை ஆண்டிலேயே அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா். இவை ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மத்தியில் பெறும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக அறிக்கையில் இடம் பெற்று இருந்தது போல், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என்பது குறித்தும், அதனுடைய செயல்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் எவ்விதமான அறிவிப்பும் இல்லாதது, மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதற்கு தமிழக முதல்வா் உடனடியாக நிதி அமைச்சரின் அறிவிப்பை திரும்பப் பெற்று, இந்த மாதம் முதலே அகவிலைப்படி உயா்வை அறிவிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com