சாலை விபத்துகளை தடுக்க ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு இயக்கம்

விபத்துகளற்ற தமிழ்நாடு என்னும் இலக்கை நோக்கிச் செல்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. சாலை விபத்துகளின் எண்ணிக்கையும்

விபத்துகளற்ற தமிழ்நாடு என்னும் இலக்கை நோக்கிச் செல்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதனால் ஏற்பட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் குறைந்திருப்பினும், மொத்த எண்ணிக்கை இன்னும் மிக அதிகமாகவே உள்ளது.

கடந்த 2020- ஆம் ஆண்டில் கரோனா தொற்றினால் பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்த போது, வாகனப் போக்குவரத்து கணிசமாகக் குறைந்தது. இருப்பினும் ஏற்றுக்கொள்ள இயலாத அளவில் 45,489 விபத்துகள் மற்றும் 8,060 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விபத்துகளின் எண்ணிக்கையைக் கணிசமான அளவில் குறைப்பதற்காக, நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, காவல், மருத்துவம், கல்வித் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நடவடிக்கைகளை ஒன்று சோ்த்து, ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்பு இயக்கம் மாற்றியமைக்கப்படும்.

மேலும், போக்குவரத்து ஆணையரகம், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் எனப் பெயா் மாற்றம் செய்யப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த பல்வேறு துறைகளுக்கு ரூ.500 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com