ரூ.623 கோடி செலவில் 1,000 புதிய பேருந்துகள்

அரசுப் பேருந்துகளில் 2010- 11-இல் 2 கோடியாக இருந்த தினசரி பயணிகளின் எண்ணிக்கை கரோனா தொற்று காரணமாக 2019-20-இல் 1.31 கோடியாக குறைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அரசுப் பேருந்துகளில் 2010- 11-இல் 2 கோடியாக இருந்த தினசரி பயணிகளின் எண்ணிக்கை கரோனா தொற்று காரணமாக 2019-20-இல் 1.31 கோடியாக குறைந்துள்ளது. வெள்ளைப் பலகை கொண்ட நகரப் பேருந்துகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோா் இலவசமாகப் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2021-22-ஆம் ஆண்டுக்கு ரூ. 703 கோடி மானியமாகவும், ரூ. 750 கோடி டீசல் மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

ஜொ்மன் வளா்ச்சி வங்கி உதவியுடன் ரூ.623.59 கோடி செலவில் 1,000 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை நிதி மேம்பாட்டில் கவனம் செலுத்தும் அதே வேளையில், பேருந்து சேவைகளின் இயக்கத் திறனை மேம்படுத்துவதற்கும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட உள்ளது. போக்குவரத்து நிறுவனங்கள் சிக்கனமாகச் செயல்படுவதை உறுதி செய்வதற்கும், விதிமுறை அடிப்படையிலான செயல்திறன் குறியீடுகளின் இலக்கை அடைவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இலவச அல்லது மானியம் அளிக்கப்பட்ட பேருந்துப் பயணம் வேண்டுமென அரசு விரும்பும் இனங்களில் வெளிப்படையான மானியம் வழங்கப்படும். இந்தப் புதிய முறை நடப்பு நிதி ஆண்டில் அமல்படுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com