தமிழக மக்களைச் சந்திக்கவே யாத்திரை: எல். முருகன்

மக்களை சந்திக்கவே தமிழகத்தில் யாத்திரை மேற்கொள்வதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்
மத்திய இணையமைச்சர் எல். முருகன்
மத்திய இணையமைச்சர் எல். முருகன்

மக்களை சந்திக்கவே தமிழகத்தில் யாத்திரை மேற்கொள்வதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். 

மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் வகையில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன், மக்கள் ஆசி யாத்திரையை (ஜன் ஆசிா்வாத் யாத்ரா)இன்று  கோவையில் தொடங்கினார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றபின் மக்களை சந்திக்கவே தமிழகத்தில் யாத்திரை மேற்கொள்கிறேன். நாடு முழுவதும் மக்கள் ஆசீர்வாத யாத்திரை நடைபெறுகிறது. கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றியே நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்றார். 

பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 

கொங்குநாடு என்பது மக்கள் முடிவு செய்யவேண்டியது. 

மத்திய அமைச்சர்களை அறிமுகம் செய்துவைக்கக்கூட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இடமளிக்கவில்லை.

தமிழகத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவது இது முதன்முறையல்ல; ஏற்கெனவே இருக்கின்றனர் என்றார். 

கோவையை அடுத்து நீலகிரி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு யாத்திரை செல்ல எல்.முருகன் திட்டமிட்டிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com