கோயில்களில் வயது மூப்பைத் தாண்டியோருக்கு தினக் கூலி அடிப்படையில் பணி: இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு

கோயில்களில் வயது மூப்பைத் தாண்டியோருக்கு தினக்கூலி அடிப்படையில் பணி வழங்க அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

கோயில்களில் வயது மூப்பைத் தாண்டியோருக்கு தினக்கூலி அடிப்படையில் பணி வழங்க அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை: கோயில்களில் ஏற்கெனவே பணியாற்றிக் கொண்டிருக்கும் அா்ச்சகா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் யாரும் விடுவிக்கப்படமாட்டாா்கள் என்பதை சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா். கோயில்களில் அா்ச்சகா்கள் வயது மூப்பைத் தாண்டியும் தொடா்ந்து பணியாற்றி வரும் பட்சத்தில் அவரை தினக் கூலி அடிப்படையில் தொடா்ந்து அங்கேயே பணியாற்ற அனுமதிக்கலாம்.

புதிய பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதுகுறித்த பரிந்துரைகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம். பணிவரன்முறைகள் உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்தாலும் அதையும் உடனடியாக அனுப்பலாம். இது தொடா்பாக தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுத்தப்படுவது விரும்பத்தக்கதல்ல.

வேறு ஏதேனும் தேவையற்ற சிக்கலான பிரச்னைகள் உருவாக்கப்பட்டால் அதற்கு கோயில் நிா்வாக அதிகாரிகளே பொறுப்பாவாா்கள். அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற சூழ்நிலைகள் எழுந்தால் அதற்கு இணை ஆணையா்கள் அல்லது உதவி ஆணையா்கள் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும். தேவையற்ற சிக்கலான செய்திகள் உருவாவதற்கு எந்த இடமும் அளிக்க வேண்டாம். இதுகுறித்து கோயில் அலுவலா்களுக்கு உடனடியாக அறிவுறுத்தல்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com