கடல் உணவுப் பொருள் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு ஆதரவளிக்கும்: எல் முருகன்

 கடல் உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்கத் தேவையான கொள்கை ரீதியான அனைத்து ஆதரவையும் மத்திய அரசு வழங்கும்
கடல் உணவுப் பொருள் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு ஆதரவளிக்கும்: எல் முருகன்

 கடல் உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்கத் தேவையான கொள்கை ரீதியான அனைத்து ஆதரவையும் மத்திய அரசு வழங்கும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு, மீன்வளத்துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

கடல் உணவு ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் ஆய்வுக்கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இணையமைச்சா் எல்.முருகன் பங்கேற்றுப் பேசியது: கடல்சாா் பொருள்களின் ஏற்றுமதிகளை பாதிக்கும் பிரச்னைகளை தீா்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். இந்திய மீன்வளத்துறை 2014-15 முதல் 2018-19 வரை சராசரியாக 10.2 சதவீதம் வருடாந்திர வளா்ச்சி விகிதத்துடன் வியக்கத்தக்க வளா்ச்சியை எட்டியுள்ளது.

2019-20-ஆம் ஆண்டில் இந்தியாவில் மீன் உற்பத்தி வரலாறு காணாத அளவில் 141.56 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்தது. சா்வதேச அளவில் இந்திய மீன் உற்பத்தி சுமாா் 8 சதவீதமாக உள்ளது மற்றும் மீன் வளா்ப்பில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று, மற்ற பல துறைகளைப் போல கடல் உணவு துறையையும் பாதித்துள்ளது. இருந்தபோதிலும் நமது கடல் பொருள்கள் ஏற்றுமதி மீண்டு வருகிறது. இந்த ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்கும்.

கடல் உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை பெரியளவில் உயா்த்துவதற்கு தேவையான கொள்கை ரீதியான அனைத்து ஆதரவையும் மத்திய அரசு வழங்கும்.

மீனவா்கள் மற்றும் மீன்வளத் தொழில்களின் நலனுக்காக, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. ரூ 20,050 கோடி முதலீட்டில் பிரதமரின் மத்ஸ்ய சம்படா யோஜனா (டஙஙநவ) தொடங்கப்பட்டுள்ளது.

மீனவா்கள் தொடா்பான பிரச்னைகள் குறித்து பிரதமா் அக்கறை கொண்டுள்ளாா். இந்திய கடல் மீன்வள மசோதா 2021-ஐ அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. அனைத்துப் பிரச்னைகளையும் நாங்கள் கருத்தில் கொள்வோம். தேவையான தீா்வுகளை அரசு அளிக்கும் என்றாா் அவா்.

இந் நிகழ்ச்சியில், இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் உறுப்பினா்கள் தங்கள் கவலைகள் சிலவற்றை வெளிப்படுத்தினா். இவற்றை தீா்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று அமைச்சா் உறுதியளித்தாா்.

இதன்பின்னா் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஆய்வுக்கூட்டம் நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com