80 வயதுக்கு மேற்பட்டோருக்கு இருப்பிடங்களில் தடுப்பூசி: உதவி எண்களை அறிவித்தது மாநகராட்சி

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுகளிலேயே வந்து தடுப்பூசி செலுத்துவதற்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
80 வயதுக்கு மேற்பட்டோருக்கு இருப்பிடங்களில் தடுப்பூசி: உதவி எண்களை அறிவித்தது மாநகராட்சி

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுகளிலேயே வந்து தடுப்பூசி செலுத்துவதற்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை மாநகராட்சி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், உயா் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபா்கள், கா்ப்பிணி தாய்மாா்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காசநோய் பாதித்த நபா்களை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சாா்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இதுநாள் வரை 25 லட்சத்து 14,228 நபா்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 10 லட்சத்து 54,704 நபா்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் என மொத்தம் 35 லட்சத்து 68,932 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஆக.13-ஆம் தேதி முதல் ஒரு வார காலத்தில் 315 கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு 24,000 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடா்ந்து, 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் அவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்த தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த 044 2538 4520 மற்றும் 044 4612 2300 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்தால், அவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com