
'மீரா மிதுனின் பேச்சால் சமூகத்தில் பதற்றம்’: ஜாமீன் தள்ளுபடி
பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான நடிகை மீரா மிதுனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை மீரா மிதுனுடன் அவரது நண்பர் ராம் அபிஷேக் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் கைதாகினர். இதனையடுத்து அவர்கள் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், புலன்விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால், ஜாமீன் வழங்க முடியாது என்று மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இது தொடர்பாக வழக்கில் ஆஜரான காவல் துறையினர், நடிகை மீரா மிதுனின் பேச்சு சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மோதலைத் தூண்டும் வகையில் பேசும் மீரா மிதுன், இதையே வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் கூறினர்.