பேராசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டும்: அமைச்சர் க.பொன்முடி 

பேராசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். 
அமைச்சர் க.பொன்முடி
அமைச்சர் க.பொன்முடி

பேராசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை 
உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் இன்று நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
இக்கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, முதல்வரின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட்டு வருகிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்தக் கரோனா தொற்றிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கு சிறந்த வழி தடுப்பூசி ஒன்றே என்ற நிலையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் தொகுதியான சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள வரலாற்று பெருமைமிக்க நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசி போடும் திட்டத்தினை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையுடன் இணைந்து மேற்கொள்ள கல்லூரி, கல்வி இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு அனைவரும் கரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com