வரி ஏய்ப்பு செய்து காரில் கடத்தி வரப்பட்ட 600 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்: ரூ.15 லட்சம் அபராதம்

சேலத்திலிருந்து மதுரைக்கு ரூ.4 கோடி மதிப்பிலான 600 கிலோ வெள்ளிப் பொருள்கள் வரி ஏய்ப்பு செய்து சனிக்கிழமை காரில் கடத்தி  வரப்பட்ட நிலையில், அவற்றை பறிமுதல் செய்த வணிக வரித்துறையினர் ரூ.15 லட்சம் அபர
போலீசார் நடத்திய திடீர் சோதனையில்  பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிப் பொருள்கள்.
போலீசார் நடத்திய திடீர் சோதனையில்  பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிப் பொருள்கள்.

திண்டுக்கல்:  சேலத்திலிருந்து மதுரைக்கு ரூ.4 கோடி மதிப்பிலான 600 கிலோ வெள்ளிப் பொருள்கள் வரி ஏய்ப்பு செய்து சனிக்கிழமை காரில் கடத்தி  வரப்பட்ட நிலையில், அவற்றை பறிமுதல் செய்த வணிக வரித்துறையினர் ரூ.15 லட்சம் அபராதம் விதித்தனர்.

சேலத்திலிருந்து மதுரைக்கு கார்கள் மூலம் வெள்ளி மற்றும் தங்க நகைகள் கடத்திச் செல்லப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச்சாவடி அருகே போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

அப்போது மதுரை நோக்கிச் சென்ற 7 கார்களில், மூட்டைகளில் வெள்ளிப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவதை போலீசார் கண்டறிந்தனர். பின்னர், இதுகுறித்து மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் காரில் வந்த 9 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில், சேலம் பகுதியிலிருந்து மதுரைக்கு விற்பனைக்காக ரூ.4 கோடி மதிப்பிலான 600 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தனர். 

அதனைத் தொடர்ந்து, அந்த வெள்ளிப் பொருள்களுக்கான ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். அப்போது அந்த வெள்ளிப் பொருள்களுக்கு உரிய வரி செலுத்தப்படவில்லை என்றும், போலியான ஆவணங்கள் தயாரித்து அவற்றை கொண்டு செல்வதும் உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே வணிக அதிகாரிகள் மூலம் அனைத்து வெள்ளிப் பொருள்களும் மதிப்பீடு செய்யப்பட்டு, அவற்றுக்கு ரூ.15 லட்சம் உடனடி அபராதம் வசூலிக்கப்பட்டது. அதன் பின்னர், உரிமையாளர்களிடம் அந்த வெள்ளிப் பொருள்கள் ஒப்படைக்கப்பட்டன. 

போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கொடைரோடு சுங்கச் சாவடியில் 600 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com