முறைகேட்டில் ஈடுபட்ட வக்பு வாரியப் பணியாளர் பணியிடை நீக்கம்

முறைகேட்டில் ஈடுபட்ட வக்பு வாரிய பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் தெரிவித்தார். 
தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மான்
தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மான்

முறைகேட்டில் ஈடுபட்ட வக்பு வாரிய பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் தெரிவித்தார். 

திருச்சி பிரஸ் கிளப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மான் கூறியதாவது: 

வக்பு வாரிய சொத்துக்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதனை மீட்கும் பணியில் தற்போது அரசுடன் ஒன்றினைந்து ஈடுபட்டு வருகிறோம். அரசியல் தலையீடு இன்றி அனைத்து செயல்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

தற்போது வக்பு வாரிய அலுவலர் தேர்வு நடைபெறவுள்ளது. மொத்தம் 27 பணியிடங்களுக்கு 8,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. முறையாக தேர்வு நடத்தப்பட்டு தகுதியின் அடிப்படையில் பணியாளர்கள் பணி அமர்த்தப்படுவர். 

தமிழகத்தில் வக்பு வாரியத்தின் கீழ் 11 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அவர்கள் வக்பு வாரிய புகார்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பர்.

தமிழகத்திலேயே முதல்முறையாக வக்பு வாரியத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அலுவலர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இனிவரும் காலங்களிலும் இதுபோன்று முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும் பாரபட்சமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com