கூத்தாநல்லூர் : 2 கிராமங்களில் நியாயவிலைக் கடைகள் திறந்து வைத்தார் எம்.எல்.ஏ.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் இரண்டு கிராமங்களில், பகுதி நேர இரண்டு நியாவிலை அங்காடிகளை திருவாரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் திறந்து வைத்தார். 
சித்தனக்குடி பகுதி நேர அங்காடியில் பயனாளிக்கு பொருட்களை வழங்குகிறார் எம்.எல்.ஏ., பூண்டி கே.கலைவாணன்
சித்தனக்குடி பகுதி நேர அங்காடியில் பயனாளிக்கு பொருட்களை வழங்குகிறார் எம்.எல்.ஏ., பூண்டி கே.கலைவாணன்

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் இரண்டு கிராமங்களில், பகுதி நேர இரண்டு நியாவிலை அங்காடிகளை திருவாரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் திறந்து வைத்தார். 

பொதுமக்களுக்கு தேவையான ரேஷன் பொருள்களை அதிக தூரத்தில் உள்ள அங்காடியில் வாங்கி வர வேண்டியது இருந்தது. இத்தகவலை அறிந்த, திருவாரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஏற்பாட்டின் படி, சித்தனக்குடி மற்றும் அண்ணுக்குடி ஆகிய இரண்டு கிராமங்களிலும், இரண்டு பகுதி நேர அங்காடிகள் திறக்கப்பட்டது. கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், சித்தனக்குடி, கர்ணாவூர் மற்றும் கள்ளிக்குடி ஆகிய 3 கிராம மக்களுக்காக, 155 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறும் வகையில், சித்தனக்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பகுதி நேர அங்காடி  திறக்கப்பட்டன.

விழாவிற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் தலைமை வகித்தார். பொது விநியோகத் திட்ட மாவட்ட பதிவாளர் ஆர்.ராமசுப்பு, மாவட்ட வழங்கல் அலுவலர் வி.லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர் வி.எஸ்.வெங்கடேசன் வரவேற்றார். திருவாரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் அங்காடியை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்தார். 
தொடர்ந்து, பயனாளிகளுக்கு அரிசி, சர்க்கரை, து. பருப்பு உள்ளிட்ட அங்காடிப் பொருள்களை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், வட்டாட்சியர் என்.கவிதா, மன்னார்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஐ.வி.குமரேசன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

இதே போல், கூத்தாநல்லூர் வட்டம், குலமாணிக்கம் அங்காடியில் பிரிக்கப்பட்டு, 126 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அண்ணுக்குடியில், பகுதி நேர அங்காடியை, மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் திறந்து வைத்தார். 

கூத்தாநல்லூர் வட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், கூத்தாநல்லூர் நகராட்சியில் 2, பண்டு தக்குடி , கொத்தங்குடி, நாகங்குடி, வேளுக்குடி 3  மற்றும் சித்தனக்குடி 1 உள்ளிட்ட 9 பகுதி நேர அங்காடிகள் இயங்கி வருகின்றன என தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர் வி.எஸ்.வெங்கடேசன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com