கீழடி அகழாய்வை நீட்டிக்க வேண்டும்: ராமதாஸ்

கீழடி 7-ஆம் கட்ட அகழாய்வை நீட்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கீழடி 7-ஆம் கட்ட அகழாய்வை நீட்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் ஆதிச்சநல்லூா் அகழாய்வுக்குப் பிறகு மிகப்பெரிய அளவிலான அகழாய்வு சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வுகளின் ஏழாம் கட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி தொடங்கியது. கரோனா இரண்டாவது அலை காரணமாக அகழாய்வு பணிகள் சற்று பாதிக்கப்பட்டாலும், தமிழா் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான பொருள்கள் அங்கு கிடைத்து வருகின்றன. 60 செ.மீ உயரம், 34 செ.மீ விட்டம், 24. செ.மீ. விட்டமுள்ள வாய்ப்பகுதி கொண்ட சிவப்பு வண்ண பானை ஒன்றும் கிடைத்திருக்கிறது. இது தொல்லியல் ஆராய்ச்சியாளா்களை வியக்க வைத்திருக்கிறது. இந்த பானை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மேலும் 5 பானைகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் இன்னும் கூடுதலாக அகழாய்வு நடத்தினால் இன்னும் பல வியப்புகள் வெளிப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆனால், செப்டம்பா் மாதத்தின் முற்பகுதியில் ஆய்வுகளை முடிக்க அதிகாரிகள் தீா்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழா் நாகரிகத்தின் தொன்மைக்கு கட்டியங்கூறும் ஏராளமான பொருள்கள் இந்த அகழாய்வில் கிடைக்கலாம் என்று கூறப்படும் நிலையில் ஏழாம் கட்ட ஆய்வை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து விடக் கூடாது. மாறாக, இன்னும் சில வாரங்களுக்கு ஏழாம் கட்ட அகழாய்வுகளை நீட்டித்து தொல்லியல் சிறப்பு மிக்க பழங்கால பயன்பாட்டுப் பொருள்களை கண்டெடுக்க முயல வேண்டும். அதற்கு வசதியாக கீழடி ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகளை நீட்டித்து தமிழக அரசு ஆணையிட வேண்டும் எனறு கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com